Posts

சிறப்பு கவிதைகள்

சவால்களை எதிர்கொள்...

 அகராதி தமிழ் சொற்கள் கவிதை  "ச " வரிகள்  .......  சதியை மதியால் வெல்...  சங்கடங்களை திறனாய்வு செய்... சகுனம் பார்த்து வீணாகாதே....  சாத்தியம் தவறாமல் வாழ்...  சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!! சத்துருவை நீயே உருவாக்காதே...  சந்தர்ப்பங்களை தவறவிடாதே...  சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே...  சமூக நோக்குடனும் வாழ்....  சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!! சம்பிரதாய சடங்கில் மூழ்காதே....  சரணடைந்து மானம் இழக்காதே....  சரீரம் கெடும் பொருள் தொடாதே....  சவால்களை எதிர்கொள்... சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!! @ கவிநாட்டியரசர்,  கவிப்புயல் இனியவன்  (யாழ்ப்பாணம்)

உயிர் எழுத்து ஆன்மீகம்

 அன்புக்கு அடக்கமானவன் நீ  ஆசையை அழிப்பவன் நீ  இன்பதத்தை தருபவன் நீ  ஈகையில் மகிழ்பவன் நீ  உலகை ஆழ்பவன் நீ  ஊண் கொடுப்பவன் நீ  எழுத்து தந்தவன் நீ  ஏர் தந்தவன் நீ  ஐந்துபொறியும் நீ  ஒற்றுமையை கூறுபவன் நீ  ஓங்காரம் ஆனவன் நீ ஔடதமானவன் நீ என்னுள் இருக்கும் நீ  உயிரே நீ..... !!! & ஆன்மீக கவிதை கவிப்புயல்  இனியவன் கவியருவி இனியவன்

கோமுற்றவரே

 கோமுற்றவரே.....  கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்....  கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்....  கோமணத்தோடு ஓடுவீர்..... !!! கோமகனே....  கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்.....  கோடரி காம்புகளும் இருக்கும்....  கோட்பாட்டை கூறி...  கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!! கோகயம் போல் இதயத்துடன்.....  கோ மகள் போல் சாந்தத்துடன்.....  கோடரம் போல் வேகத்துடன்.....  கோணாய் போல் புத்தியுடன்.....  கோ மகனே ஆட்சி செய்...... !!! @ கவிப்புயல் இனியவன்

வினா கவிதைகள்

Image
  on Tue 8 Sep 2015 - 19:46 by கவிப்புயல் இனியவன் என்னுயிர் நண்பா ..... உன்னை விட்டு யாரிடம் .... பகிர்வேன் என் உணர்வை ...? மனதிலே  துன்பம் வரும்போது ..... என்னோடு இருந்து அழும் ... ஒரே ஜீவன் நீதானே .... இன்பம் வரும்போதும் ... என்னோடு இருந்து .... சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!! ஒரே ஒரு கவலை உன்னால் ..... நான் அழும்போது தான் அழுகிறாய் .... நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் .... எப்போது என்னை நீ அழவைப்பாய்....? எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...? எப்படி உன்னால் முடிகிறது ...? என் உணர்வுகளை அப்படியே... எனக்கு காட்டுகிறாய் ....? என்மீது கொண்ட கோபத்தால் .... உன்னை அடித்துவிட்டேன் ..... எனது கையில் குருதி .... உனது இதயம் சுக்குநூறாகியது.....!!! * * * * * * * * * * * * * * * * * * * என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...? thumb_up Like thumb_down Dislike more_horiz on Tue 8 Sep 2015 - 20:05 by Nisha அட! யாருங்க இது! யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே! thumb_up Like thumb_down Dislike more_horiz on Tue 8 Sep 2015 - 20:08 by கவிப்புயல் இனியவன் அவர் வரும்போது ....

அகராதியில் கவிதை

Image
  அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!! அகமதி - செருக்கு  அகோராத்திரம் - பகலும் இரவும்  அந்தகாரம் - இருள் கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 18 Nov 2015 - 19:55 by பானுஷபானா கவிதை மிக அருமை thumb_up Like thumb_down Dislike more_horiz on Thu 19 Nov 2015 - 16:23